ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியை 3 ஊராட்சியாக பிரிக்க வேண்டும்

 

கொள்ளிடம்,ஜூன் 19: கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியை 3 ஊராட்சிகளாக பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி கொள்ளிடத்தில் முக்கிய பகுதியிலேயே அமைந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு பேரூராட்ச்சியாக இருந்த ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மீண்டும் கிராம ஊராட்சியாக மாற்றப்பட்டது.

கொள்ளிடம் ஒன்றியத்திலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சியாக ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி இருந்து வருகிறது. 15 வார்டுகளைக் கொண்டதாகும். இதில் உள்ள 21 குக்கிராமங்களில் 15000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதே ஊராட்சியைச் சேர்ந்த நாதல்படுகை கிராமத்திலிருந்து திருமயிலாடி கிராமத்திற்கு செல்ல 8 கிலோமீட்டர் தூர இடைவெளி உள்ளது.முன்பு பேரூராட்சியாக செயல்பட்டு வந்த ஆணைக்காரன் சத்திரம், பின்னர் ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி பழையபடி பேரூராட்சியாக பிரிக்கப்பட வேண்டும். கொள்ளிடம் ஊராட்சி தனி தாலுகாவாக மாற்றுவதற்கான செயல்திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி பழையபடி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மூன்று ஊராட்சியாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியை 3 ஊராட்சியாக பிரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: