தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு வரவேற்பு

சிவகங்கை, ஜூன் 19: வாக்கோ இந்தியா சார்பில் ஜூனியர் நேஷனல் கிக் பாக்ஸிங் போட்டி-2024 மேற்குவங்கம் மாநிலம், சிலிகுறி மாவட்டத்தில் நடைபெற்றது, இதில் 27 மாநிலங்களில் இருந்து 611 வீரர்கள் பங்கேற்றனர், இதில் தமிழகத்திலிருந்து 45 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் பங்கேற்றனர். இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்ற இடையமேலூர் அரசு பள்ளி 11ம் வகுப்பு மாணவர் வசந்தன் ஜூனியர்-67 இடை பிரிவில் ரிங் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. ஊருக்கு திரும்பிய மாணவர் வசந்தனுக்கு இடையமேலூர் ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாணவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் குணசீலன் சித்ரா, தீனதயாளன் ஆகியோருக்கும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டினர்.

The post தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: