ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம், ஜூன் 19:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தேவஸ்தானம் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாலை பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர்குழு பாண்டி தலைமை வகித்தார். ஜோதிபாசு, பிச்சை முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேவஸ்தானம் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டது. பக்தர்களிடம் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை சுகாதார கேடான வகையில் தயாரித்து ஊழல் செய்யும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்படிக லிங்க பூஜைக்கு பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கவும், மேலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் ஜீவானந்தம், செந்தில், வடகொரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: