சென்னை ஏர்போர்ட்டுக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: கோவை உட்பட மேலும் 40 விமான நிலையங்களுக்கும் ஒரே நாளில் மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று விமான இயக்குனர் அலுவலகத்திற்கு, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து இ-மெயில் தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று காலை 8.50 மணிக்கு வந்த இ- மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன, அவை வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று காலை தொடங்கியது. இந்த வெடிகுண்டு மிரட்டல், வழக்கமான புரளியாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலைய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள் சோதனைகள் நடந்தது. மேலும் விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பும் இடம் உள்ளிட்ட பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர்.

மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதற்கிடையே இ-மெயில் தகவல் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதேபோல் கோவை உட்பட நாடு முழுவதும் 41 விமான நிலையங்களுக்கு இ-மெயிலில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

The post சென்னை ஏர்போர்ட்டுக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: கோவை உட்பட மேலும் 40 விமான நிலையங்களுக்கும் ஒரே நாளில் மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: