இலவசமாக அரிசி வழங்கல் மயங்கி விழுந்து பள்ளி மாணவன் பலி

ஈரோடு, ஜூன் 19: அம்மாபேட்டை அடுத்துள்ள பிகே புதூரை சேர்ந்தவர் கோபால். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் காமேஷ் (14) அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதில் இருந்து காமேஷ்க்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் காமேஷ் இருந்துள்ளார். பெற்றோர் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது காமேஷ் மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர் உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post இலவசமாக அரிசி வழங்கல் மயங்கி விழுந்து பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: