ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

 

ஈரோடு, ஜூன் 21: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் நேற்று வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கோபி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வருவாய் தீர்வாயத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, கிராம வருவாய் கணக்குகளை நேர் செய்தார். ஈரோடு தாலுகா அலுவலகத்தில், ஈரோடு ஆர்.டி.ஓ சதீஸ்குமார் வருவாய் தீர்வாயப் பணியை மேற்கொண்டார். தாசில்தார் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தனர். ஆர்.டி.ஓ சதீஸ்குமார் அவற்றை நேர் செய்து ஒப்புதல் அளித்தார். மேலும், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்த ஆர்.டி.ஓ சதீஸ்குமார், அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். நேற்றைய தீர்வாயத்தில் நசியனூர் பிர்காவை சேர்ந்த வருவாய் கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.

இதேபோல, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை தாலுகாக்களில் நேற்று (20ம் தேதி) முதல் வரும் 27 வரையிலும், அந்தியூரில் வரும் 26ம் தேதி வரையும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது. தாளவாடியில் நேற்று ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறாது.

The post ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Related Stories: