கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை மாற்றியமைக்க கோரிக்கை

 

மொடக்குறிச்சி, ஜூன் 21: சிவகிரி பகுதி கைத்தறி நெசவாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் சார்பில் நெசவாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்குப்பாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரத்னவேல் தலைமை தாங்கினார். நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் சண்முகம், வேல்சாமி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

கைத்தறி நெசவாளர்கள் சங்க மாநில செயலாளர் வரதராஜன், நெசவாளர் சங்க மூத்த தலைவர்கள் சோமசுந்தரம், ரங்கசாமி ஆகியோரது உருவ படத்தினை திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் கைத்தறி தொழிலை பாதுகாத்திட கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு ஒன்றிய அரசு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும், கைத்தறிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரக ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும், 30 வருடங்களாக மாற்றி அமைக்கப்படாமல் உள்ள நெசவாளர்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும்,

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நூல் கொள்முதல் செய்ய குறிப்பிட்ட தேதியில் அனுமதி வழங்க வேண்டும், கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்திட பட்ஜெட்டில் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் கைத்தறி மான்ய கோரிக்கை விவாதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: