பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா

பெரியகுளம், ஜூன் 18: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரை கடைவீதி பகுதியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. வராக நதியின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டும் திருவிழா தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. முகூர்த்த காலுடன் பக்தர்கள் நகரில் முக்கிய வீதிகள் வழியாக பூரணமாக வந்து கோவில் முன்பு முகூர்த்தகாலுக்கான பூஜைகள் நடைபெற்றது. பின்ன முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 2ம் தேதி சாட்டுதல் நிகழ்ச்சியும், 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தரி மற்றும் பணியாளர்கள், பூசாரிகள் செய்திருந்தனர்.

The post பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: