ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +1 மாணவர்களுக்கு 2024-25ம் கல்வியாண்டிற்கான வகுப்பு துவக்க விழா பள்ளி விழா கலையரங்கில் நேற்றுமுன்தினம் நிறுவனத் தலைவர் டாக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் தலைமை உரையாற்றுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதிலும் குறிப்பாக செல்போனினால் அதிகபடியான மாணவர்கள் தன் வாழ்வை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிலிருந்து நீங்கள் மீண்டு எழுந்து தம் தாய் தந்தையை மதித்து அவர்களின்சொல்படி நடந்து உங்கள் சாதனைகளால் அவர்களை தலைநிமிரச் செய்யவேண்டும்.

புதிதாய் துவங்கும் இந்த வருடத்தில் இறைவன்அருளால் நல்லவைகளை சிந்தித்து, நல்வழி நடந்து நன் வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்று கூறினார். பொதுத்தோவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் NEET தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்து பேசினார். இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் செல்வி.கலைச்செல்வி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மருதுதுரை, துறைத்தலைவர்கள் நல்லேந்திரன், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், பாலகிருஷ்ணன், மகாலட்சுமி, கனகராசு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். கணிதவியல் ஆசிரியர் செல்வம் வரவேற்று பேசினார்.வேதியியல் ஆசிரியர் திவ்யராஜ் நன்றி கூறினார்.

The post ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: