புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

 

ஓட்டப்பிடாரம், ஜூன் 16: தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் நடுநிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு தொகுப்பு அட்டை வழங்கப்பட்டது. புதியம்புத்தூர் அருகே தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது. துவக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை இமாகுலேட் குளோரியா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் வானியல் குறித்து பயிற்சி அளித்தார். இதில் பள்ளி மாணவர்களுக்கு வானில் கோள்களை காண்பது குறித்தும் இன்றைய சூழ்நிலையில் வானியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் கோள்கள் பற்றிய விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை பஞ். தலைவர் மாரியம்மாள் வழங்கிப் பேசினார். இதில் ஊராட்சி செயலாளர் அழகு பெருமாள்சாமி, மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: