பாத்ரூம் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்: பெண் பயணிகள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 16: ஆர்.எஸ்.மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் அருகே வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தொலைதூரங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கட்டண கழிப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது.

ஆனால் இங்கு பாத்ரூம் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பேருந்துகளில் இருந்து அவசரமாக பாத்ரூம் செல்லும் பெண் பயணிகள் ஒருவித கூச்சம், அச்சத்துடன் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பெண் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக பெண் பயணிகளின் நலன் கருதி பாத்ரூம் பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்கின்றனர்.

The post பாத்ரூம் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்: பெண் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: