சிறப்பு எஸ்.ஐகளுக்கு கமிஷனர் பாராட்டு

மதுரை, ஜூன் 16: தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 1999ம் ஆண்டு, தமிழக காவல் துறையில் 2ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு, சிறப்பு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த 136 தலைமை காவலர்கள் சிறப்பு எஸ்.ஐகளாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்களை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரில் அழைத்து பணி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். மேலும், எதிர்காலத்தில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post சிறப்பு எஸ்.ஐகளுக்கு கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: