கோயில்களில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி: அறநிலையத்துறையினர் தகவல்

மதுரை, ஜூன் 16: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன், பழநி முருகன், சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம், பெரும்புதூர் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதேபோல் திருவண்ணாமலை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற விரும்புவோர் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த அர்ச்சகர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

உணவு மற்றும் தங்குமிடத்துடன் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி பெற்ற பின்னர், அறநிலையத்துறையில் அர்ச்சகர் பணி வாய்ப்பு பெறலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், இந்து சமய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம் என இந்து அறநிலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post கோயில்களில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி: அறநிலையத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: