திண்டுக்கல்லில் ஜூன் 21ல் திருநங்கைகளுக்க்கு சிறப்பு முகாம்

திண்டுக்கல், ஜூன் 16: திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானிய தொகை வழங்குதல், சுயஉதவி குழு பயிற்சி மற்றும் மானிய தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நலத்திட்டங்கள் அனைத்து திருநங்கைகள் பெற்று பயனடைய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விபரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, திருநங்கைகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் ஜூன் 21ல் திருநங்கைகளுக்க்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: