அதிமுக ஊராட்சி தலைவர் மீது அதிருப்தி 7 கவுன்சிலர்கள் ராஜினாமா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. இவரது கணவர் ரவி. இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். தலைவர், துணை தலைவர் வேதையன் (திமுக) உள்பட 10 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 7 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை திருத்துறைப்பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ரமேஷிடம் (கிராம ஊராட்சி) கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 7 பேர் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், மன்ற தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். வார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய முடியவில்லை. எனவே எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறியிருந்தனர். கடிதம் மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட உள்ளது என்றார்.

The post அதிமுக ஊராட்சி தலைவர் மீது அதிருப்தி 7 கவுன்சிலர்கள் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: