வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம்

 

தஞ்சாவூர், ஜூன் 15: தஞ்சை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் கூறியதாவது:தஞ்சை மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞர்களை குறி வைத்து சில போலி ஏஜெண்டுகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த ஏஜெண்டுகள் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து போலி விசா மற்றும் டிராவலிங் விசா மூலம் மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஏஜெண்டுகளுக்கு உரிமம் இருக்கிறதா? என்று தெரியாமலே பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் போலிசாரிடம் மனு அளிப்பது அதிகரித்து வருகிறது. இது போன்ற ஆட்கள் அனுப்பும் ஏஜென்சிகளுக்கு உரிமம் ? இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள 9042149222 என்ற உதவி எண் மற்றும் poechennai@mea.in.gov.in < mailto:poechennai@mea.in.gov.in > முகவரி முலம் விவரங்களை சரிபார்த்து தெரிந்துகொள்ளலாம்.மேலும் உரிய அனுமதி பெறாமல் போலி ஏஜென்சிகள் நடத்தும் நிறுவனங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் தெரிவித்துள்ளார்.

The post வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்டுகளிடம் ஏமாற வேண்டாம் appeared first on Dinakaran.

Related Stories: