உலக ரத்ததான கொடையாளர்கள் தினம் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம்

 

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூரில் உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கே.ஆர்.வி கணேசன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரத்ததானம் செய்தனர். பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் சேவை மனப்பான்மையுடன் வருடந்தோறும் ரத்ததானம் செய்வது வழக்கம்.அதன்படி ஜூன் 14 உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது. கல்பாடி அஸ்வின்ஸ் மீட்டிங் ஹாலில் நடைபெற்ற இம்முகாமை அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கே.ஆர்.வி.கணேசன் முன்னிலையில் அஸ்வின்ஸ் இயக்குனர் அஸ்வின் தொடங்கிவைத்தார்.

இதில் அஸ்வின்ஸ் குழுமத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் முன்வந்து ரத்ததானம் செய்தனர்.பெரம்பலூர் முத்து மெடிக்கல் ட்ரஸ்ட் சார்பில் மருத்துவர் பிரகாஷ் மற்றும் வீரமுத்து தலைமையிலான குழுவினர் உரிய பரிசோதனைகள் செய்து ரத்தத்தை தானமாக பெற்றனர்.காலை 9.30 மணி தொடங்கி பிற்பகல் 3 மணிவரை ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததானம் செய்தவர்களை அஸ்வின்ஸ் இயக்குனர் அஸ்வின் கவுரவித்தார். இதற்கான ஏற்பாடுகள் அஸ்வின்ஸ் குழுமம் மற்றும் முத்து மெடிக்கல் ட்ரஸ்ட் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

The post உலக ரத்ததான கொடையாளர்கள் தினம் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: