5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் எம்பி சிவசுப்பிமணியன் உருவ படத்திற்கு மலரஞ்சலி

 

பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் எம்.பி சிவசுப்ரமணியன் 5ம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்பியுமான எஸ்.சிவசுப்ரமணியனின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், அவரது உருவப்படத்திற்கு, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில், எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி எம்பி கே.என்.அருண்நேரு மலரஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், பொருளாளர் ரவி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் எம்பி சிவசுப்பிமணியன் உருவ படத்திற்கு மலரஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: