நீட் தேர்வில் தவறுகள் சரி செய்யப்படும்: கல்வி அமைச்சர் உறுதி

புதுடெல்லி: நீட் தேர்வுகளில் முறைகேடுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சரி செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ நீட் தேர்வில் ஒவ்வொரு அம்சமும் கவனிக்கப்படுகிறது. எந்தவொரு தேர்வையும் நடத்துவதில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தவறுகள் கண்டறியப்பட்டால் தேசிய தேர்வு முகமையின் பொறுப்பும் சரி செய்யப்படும். நீட் தேர்வாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. மாணவர்களின் கவலைகள் நியாயத்துடனும் சமத்துவத்துடனும் தீர்க்கப்படும். நீட் தொடர்பான உண்மைகள் உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் உள்ளன. கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கப்படும். மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுவிட்டதால் இப்போது புதிய பிரச்சினையைத் தேடுகிறார்கள். எங்களிடம் உண்மைகள் உள்ளன. பொய்யின் அடிப்படையில் மாணவர்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்துவது சரியல்ல’ என்றார்.

The post நீட் தேர்வில் தவறுகள் சரி செய்யப்படும்: கல்வி அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: