சமாஜ்வாடி கட்சி தலைவர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பல்லியா: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சுமர் சிங். இவர் கடந்த 2017ம் ஆண்டு மே 21ம் தேதி டோகாட்டி காவல்நிலைய பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் சுமர் சிங்கை சுட்டு கொன்றனர்.
இந்த வழக்கில் ராஜ்நாராயணன், ஜிதேந்திர சிங், தர்மேந்திர சிங் மற்றும் சாகர் சிங் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

The post சமாஜ்வாடி கட்சி தலைவர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: