சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு

சென்னை: சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘அரசு கலைக்கல்லூரி, நந்தனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இளநிலை படிப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருவதால், காலி இடங்கள் உயந்து வருவதாலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதுநிலை, முனைவர் பட்ட வகுப்புகளில் மாணவிகள் அதிகளவில் சேர்க்கை பெற்று பயின்றுவருவதால் இருபாலர் கல்லூரியாக மாற்றப்படுகிறது.

The post சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: