ஆந்திர சோதனைச்சாவடியில் விஜிலென்ஸ் ரெய்டு மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது: கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம், நரஹரிபேட்டை சோதனை சாவடியில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய ரெய்டில் ரூ.71 ஆயிரத்து 970 சிக்கியது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழக எல்லையையொட்டி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலத்தில் உள்ள நரஹரிபேட்டை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று வருவதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விஜிலென்ஸ் போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30  மணியிலிருந்து நேற்று அதிகாலை 5 மணிவரை சோதனைச்சாவடியில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.71 ஆயிரத்து 970ஐ பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவ்வழியாக செல்லும் லாரிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளிடம்  சோதனை சாவடி அதிகாரிகள், ஏஜென்ட்களை நியமித்து லஞ்சம் வசூலித்தது தெரியவந்தது. இதனால் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் உட்பட 4 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post ஆந்திர சோதனைச்சாவடியில் விஜிலென்ஸ் ரெய்டு மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது: கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: