சேலம் திருமணிமுத்தாற்றில் ரசாயனக்கழிவுகளை கலக்கும் சமூக விரோதிகள்: விவசாயிகள் அதிர்ச்சி

சேலம்: சேலத்தில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை நேரடியாக திருமணிமுத்தாற்றில் திறந்துவிடுவதால் ஆற்றில் நீர், நுரை பொங்க பெருக்கெடுத்து ஓடுகிறது. சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் திருமணிமுத்தாறு விவசாயிகளை கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கனமழையை பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் திருமணிமுத்தாற்றில் சுத்திகரிக்கப்படாத சாய கழிவுகளை திறந்துவிட்டுள்ளதால் சாய நுரைகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே சாய நுரைகள் மலைபோல் குவிந்து காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக சேலம் மாநகர பகுதியில் அனுமதியின்றி இயக்கப்படும் சாயப்பட்டறை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் திருமணிமுத்தாறு, சாயக்கழிவு ஆறாக மாறியுள்ளது. நுரைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதியில் விழுவதால் பொதுமக்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post சேலம் திருமணிமுத்தாற்றில் ரசாயனக்கழிவுகளை கலக்கும் சமூக விரோதிகள்: விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: