பிராணசக்தியும் அம்பிகையும்

சென்ற நாமத்தின் தொடர்ச்சியாக, மூச்சைப்பற்றி பார்ப்போம்…

இந்த மூச்சினுடைய length எப்போது அதிகமாகும் எனில், எப்போது மூச்சு slow ஆகுதோ அப்போதுதான் மூச்சினுடைய lengthம் அதிகமாகும். அதனால்தான் அம்பிகை என்ன செய்கிறாள் எனில், மந்தகமநமாக நடக்கிறாள். இந்த மராளி என்கிற ஹம்ஸ… ஹம்ஸ மந்திரமாக இருக்கக்கூடிய மூச்சு. அந்த மூச்சிலேயே அம்பிகை ஹம்ஸ மந்திரமாக நடமாடுகிறாள். எப்படி நடமாடுகிறாள் எனில் மெதுவா… மெதுவா… மந்தகமநமாக நடமாடுகிறாள். இப்போது அன்ன நடை அழகு என்பதும் ஹம்ஸ பட்சியின் நடையழகும் எப்படி யோக ரூபமாக இந்த நாமத்தில் விரிந்திருக்கிறது என்று பாருங்கள். எப்போது மூச்சு அதிகமாகும். கோபம், பயம், பதற்றம், தர்மத்திற்கு உட்பட்டு நடக்காத சமயத்தில், தவறு செய்யக்கூடிய சமயத்தில், stress போன்ற இந்தச் சமயத்தில் மூச்சினுடைய வேகம் அதிகமாக இருக்கும். ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை அந்த மூச்சினுடைய நடுக்கம், வேகமே காண்பித்துக் கொடுத்துவிடும். இதெல்லாம் இல்லாத சமயத்தில் மனம் எப்போது சத்வ குண பிரதானமாக மனம் இருக்கிறதோ, இன்னும் சொன்னால் ரஜோ குணத்திலும், தமோ குணத்திலும் இல்லாமல் சத்வ குணத்தில் மனம் எப்போது இருக்கிறதோ அப்போது மூச்சினுடைய வேகம் தானாகவே குறைந்துவிடும். அதற்கடுத்து நாம் தூங்கும்போது சுஷுப்தி என்கிற கனவுகள்கூட அற்ற நிலையில் குறைந்து விடும். ஏனெனில், சுஷுப்தியில் நாம் சொத்சொரூபம் என்கிற சொரூபத்தில் நாம் நிலைபெற்று விடுகின்றோம். நாம் சொத் சொரூபத்திற்குபோவதால், மூச்சினுடைய வேகம் குறைந்து போகிறது. நாம் நடைமுறை வாழ்க்கையில் ஒரு விஷயத்தின்மீது மனஒருமையோடு காரியமாற்றிக்கொண்டிருந்துவிட்டு, உதாரணமாக ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நம்மைச் சுற்றிலும் நடப்பது நமக்கு எதுவுமே தெரியாது.

கடைசியில் நிறைவடையும்போது நம்மையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வரும். இந்த பெருமூச்சு ஏன் அப்படியெனில் நம்முடைய மனம் ஒருமைப்பட்டிருக்கும்போது மூச்சினுடைய வேகமானது அப்படியே குறைந்து போயிருந்தது, மனம் ஒருநிலைப் படும்போது மூச்சினுடைய வேகமும் குறைந்துவிடும். அப்போது பிராணாயாமம் தானாக நடக்கும். நாம் பிராணாயாமம் பண்றது ஒருவகை. மனம் ஒருநிலைப்படும்போது பிராணாயாமம் தானாகவே நடக்கும். அந்தப் பிராணாயாமம் எதுவென்று கேட்டால், இப்போது நாம் பார்க்கும் நாமமான மராளி மந்த கமனா… மராளி மந்த கமனா என்கிற அம்பிகையின் அந்த நடைதான், நமக்குள் ஹம்ஸ மந்திரமாக ஸோஹம் என்கிற ரூபத்தில் ஸ – அஹம் நீயே அது என்று அங்கு விளங்கும். அந்த நிலையை அடைந்தவர்களை நாம் பரமஹம்ஸர்கள் என்கிறோம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அதுவே ஆவார். சாட்சாத் அம்பிகையே உடலெடுத்து முன்னும் பின்னும் நடமாடினால் எதுவோ அதுவேஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸராக பூலோகத்தில் அவதரித்தது. அன்னை சாரதா தேவிக்கும் காளியே வந்து நானே பரமஹம்ஸருக்குள் உறைகின்றேன் என்று பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.இந்த மந்திர ஜபமானது எங்குபோய் நிற்கிறதெனில், இதை நாம் கண்கூடாக பார்க்கலாம்… இந்த மனமானது வேறு ஏதாவதாகவும் மாறாமல் அதை அப்படியே பாதுகாப்பதற்குத்தான் இந்த மந்திர ஜபம் பயன்படுகின்றது. இந்த மனம் வேறு எதுவாகவும் மாறவில்லை என்றால் அது சொத்சொரூபத்தில் நிலைபெற்று விடுகின்றது.

if at all the mind is not becoming, its stays in its own state.எனவே, இந்த மந்திரம் இல்லையெனில் அந்த மனமானது தொடர்ச்சியாக ஏதாவது occupying செய்து கொண்டே இருக்கும். ஒருமுறை புட்டபர்த்தி சத்தியசாய்பாபா ஒரு கதை சொல்வார். ஒருவன் காட்டுக்குள் சென்று விடுகிறான். திடீரென்று அங்கு பூதம் வந்து விடுகிறது. பூதத்தை பார்த்தவுடன் பயந்து விடுகின்றான். ஆனால், பூதம் வந்து இவனிடம், ‘‘நீ என்ன வேலை சொன்னாலும் செய்கிறேன். நான் ஒரு அடிமையாக இருக்கிறேன். நீ என்னை ஏற்றுக்கொள்’’ என்று அந்த பூதம் சொன்னது. இவனும் நமக்கு வேலை செய்ய ஒரு அடிமை கிடைத்தான் என்று ஏற்றுக் கொண்டான். ஆனால், அந்த பூதம் ஒரு condition போட்டது. நீ எவ்வளவு வேலை வேண்டுமானாலும் கொடு. எனக்கு வந்து ஓய்வே கொடுக்க வேண்டாம். நீ என்ன வேலை கொடுத்தாலும் நான் செய்வேன். ஆனா, எனக்கு எந்த வேலை இல்லாமல் சும்மா உட்காரச் சொன்னால் என்னால் உட்கார முடியாது. அப்படி வேலை கொடுக்காமல் சும்மா உட்காரச் சொன்னாய் எனில், நான் உன்னை சாப்பிட்டு விடுவேன்’’ என்று பூதம் சொன்னது. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவன் முடிந்த அளவுக்கு அந்த பூதத்திற்கு வேலையை கொடுத்துக் கொடுத்து பார்க்கிறான். எவ்வளவு வேலை கொடுத்தாலும் சட்டென்று அந்த வேலையை முடித்து விடுகின்றது. அதற்கு மேல் என்ன வேலை கொடுப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் இவனை அந்த பூதம் சாப்பிட்டுவிடும். அதனால், என்னவென்று தெரியாமல் இந்த பூதத்தை அடிமையாக வைத்துக் கொண்டது தவறாகப் போய்விட்டதே… வேலை செய்வதற்காக இந்த பூதத்தை அழைத்துக் கொண்டுவந்தால், நமக்கே இது ஆபத்து ஆகிவிட்டதே என்று அந்த பூதத்திடமிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி என்று பார்க்கிறான்.

அந்த நேரம் பார்த்து அங்கு ரிஷி ஒருவர் வருகிறார். அந்த ரிஷியிடம் சென்று ‘‘நான் இப்படி மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த பூதத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கணுமாம். கொடுக்கவில்லையெனில் என்னை சாப்பிட்டு விடுமென்று சொல்கிறது. இந்த பூதத்திடமிருந்து எப்படியாவது என்னை காப்பாற்றி விடுங்கள்’’ என்று சொன்னான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு நீண்ட கம்பு ஒன்றைக் கொண்டு வா என்று சொன்னாராம். அந்த கம்பை பூமியில் நட்டு வைத்தார். இப்போ, அந்த பூதத்திற்கு என்னென்ன வேலை இருக்கோ அந்த வேலையெல்லாம் கொடு.’’ ‘‘நான் எல்லா வேலையையும் கொடுத்துட்டேன். எல்லா வேலையையும் முடிச்சிடுச்சி. இப்போ பூதத்திற்கு அடுத்த வேலை என்ன கொடுக்கறதுன்னு தெரியலை.’’ மீண்டும் அந்த பூதத்தை ரிஷி அழைக்கச் சொன்னார். கூப்பிட்ட உடனே உயரமான அந்த கம்பை காண்பித்து, இந்த கம்பின் மேலேயும் கீழேயும் ஏறி ஏறி இறங்கச் சொல்லு என்றார். அப்போது அந்த பூதம் கேட்டிருக்கிறது, “நான் எப்போ வரைக்கும் இந்த வேலையை பார்க்க வேண்டும்’’. ‘‘எப்போ உனக்கு அடுத்த வேலையை கொடுக்கறேனோ அதுவரைக்கும் இந்த வேலையைப் பார். உடனே, அந்த பூதம் மேலேயும் கீழேயும் இறங்கியபடியே இருந்திருக்கிறது. அப்போ, ரிஷி சொன்னாராம், அடுத்து உனக்கொரு வேலை வருமல்லவா… அது வரையிலும் இந்தப் பூதம் மேலேயும் கீழேயும் ஏறியும் இறங்கியபடியே இருக்கட்டும். நாளைக்கு காலையில் உனக்கு என்ன வேலை வருகிறதோ, அப்போது அந்த வேலையை பூதத்திடம் சொல்லு.

பூதம் அந்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா… திரும்பவும் இந்த கம்பு மேலே ஏறி இறங்க விட்டுவிடு. இப்போது பூதத்திற்கும் தொடர்ச்சியாக வேலை இருக்கும். மற்ற நேரத்தில் உன் வேலையையும் முடித்துக் கொடுத்துவிடும். பூதமும் உன்னை சாப்பிடாது. இந்தக் கதையை நாம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண கதை மாதிரி தெரியும். பாபா இந்த கதையைச் சொல்லிவிட்டு ஒரு யோக சூட்சுமத்தையும் சேர்த்துச் சொல்கிறார். இந்த பூதம் மேலேயும் கீழேயும் ஏறி ஏறி இறங்குகிறதல்லவா… இந்த பூதம் என்பது நம்முடைய மனசு. இது எப்போது பார்த்தாலும் ஏதாவது வேலையை செய்தபடியே இருக்கும். அதாவது becomingலேயே இருக்கும். அடிப்படையாக செய்ய வேண்டிய வேலைகளை அந்த மனசு செய்யட்டும். மற்ற நேரத்தில் அந்த மனசு என்ன செய்ய வேண்டுமெனில், இந்த பூதம் எப்படி கம்பின் மேலேயும் கீழேயும் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததோ, அதே மாதிரி இந்த மனசை நம்முடைய பிராணன் என்ற கம்போடு இணைந்து, ஹம் ஸ என்று மேலேயும் கீழேயும் இறங்க விட்டுவிடு என்றார்.

ஸோ ஹம் என்று ஏற இறங்க விடு என்றார். இப்போது இந்த மனசு என்ற பூதம், பிராணன் என்ற கம்பில் போய் ஹம்ஸ ஸோஹம் என்று மேலேயும் கீழேயும் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். அப்படி ஹம்ஸ ஸோஹம் என்று மேலேயும் கீழேயும் ஏறி இறங்காமல் இருந்ததானால், அந்த மனசுங்கற பூதமே நம்மைச் சாப்பிட்டு விடும். அந்த மனசு என்கிற பூதம் நம்மைச் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில், அதற்கு என்ன வழி என்றால், இந்த அஜபா என்கிற ஹம்ஸ ஸோஹம் என்பதுதான் அதற்கு ஒரே வழி. மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, ஜபித்து அஜபா என்கிற நிலையை அடையும்போது உங்கள் பிராணனும் அதாவது மூச்சும்… அது ஒடுங்கும் இடமும் ஹம்ஸ ஸோஹம் என்கிற மகாவாக்கியங்கள் உணர்த்தும் நிலையை எய்திவிடும். அங்கு ஹம்ஸ பாத நடனத்தை நீங்கள் தரிசிப்பீர்கள். இந்த நாமத்திற்கான கோயில் வேதாரண்யம் ஆகும். சப்த விடங்கத் தலங்களில் இது ஒன்றாகும். சப்த விடங்கத்தில் தியாகராஜர் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நடனமாக ஆடிக் காட்டுகிறார். வேதாரண்யத்தில் ஹம்ஸபாத நடனம் ஆடிக்காட்டுகிறார். இங்குள்ள சிவனின் பெயர் வேதாரண்யேஸ்வரர். அம்பிகை யாழைப் பழித்த மொழியம்மை. ஹம்ஸ பாத நடனம் என்பது மிக உயர்ந்த நிலை. அந்த நிலையை உங்களுக்குள் தரிசிக்க இந்த மந்திரத்தையும் இதற்குரியஆலயத்திற்கும் சென்று தரிசியுங்கள்.(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post பிராணசக்தியும் அம்பிகையும் appeared first on Dinakaran.

Related Stories: