புதுக்கோட்டை மாவட்டத்தில் நத்தம் நில வரித்திட்ட பட்டா வழங்கலை துரிதப்படுத்த வேண்டும்

 

புதுக்கோட்டை, ஜூன் 12: நத்தம் நில வரித்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் புதுக்கோட்டை நகர செயலாளர் சோலையப்பன் மவாட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை நகரத்தில் குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு நத்தம் நிலவரித்திட்டத்தின் மூலம் பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், புதுக்கோட்டை நகரத்தின் பல பகுதிகளில் நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே, நத்தம் புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் நத்தம் நிலவரித் திட்டத்தின் மூலம் உடனடியாக பட்டா வழங்கவும், வழங்கப்பட்ட பட்டாவை உடனடியாக கனிணியில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நத்தம் நில வரித்திட்ட பட்டா வழங்கலை துரிதப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: