ஆறுமுகநேரியில் புகையிலை பொருள் விற்ற கடை உரிமையாளர் கைது

ஆறுமுகநேரி, ஜூன் 12: ஆறுமுகநேரி கீழநவலடி விளையை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயகாந்தன்(40). இவர், இதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஆறுமுகநேரி எஸ்ஐ அரிக்கண்ணன் மற்றும் போலீசார், ஜெயகாந்தனை கைது செய்தனர். இவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆறுமுகநேரியில் புகையிலை பொருள் விற்ற கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: