பிரெஞ்ச் ஓபனில் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம்: ஸ்வியாடெக் மகிழ்ச்சி


பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஓற்றையர் பிரிவின் பாரீஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக் மற்றும் 12வது நிலை வீராங்கனையான இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பாலோனியை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது முறையாக பாரிஸ் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவருக்கு 5வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டமாகும். மேலும் பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை ஸ்வியாடெக் பெற்று இருக்கிறார்.

இதுகுறித்து கஸ்வியாடெக் கூறுகையில், “இங்கு தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பாரிஸ் மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து விளையாடுவதை நான் எதிர்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார். இந்த போட்டியில் தோல்வியுற்ற பாலோனி கூறுகையில், ஸ்வியாடெக்கை எதிர்கொண்டு விளையாடுவது டென்னிஸ் விளையாட்டில் மிக கடுமையான சவால்’’ என்றார்.

The post பிரெஞ்ச் ஓபனில் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம்: ஸ்வியாடெக் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: