இன்று இரவு 2 போட்டி; தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து இங்கி.-ஆஸ்திரேலியா மோதல்

பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (டி பிரிவு) சந்திக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 77 ரன்னில் சுருட்டிய தென்ஆப்பிரிக்கா 2-வது வெற்றியை குறி வைத்து களம் காணுகிறது. அதே சமயம் தனது முதல்ஆட்டத்தில் நேபாளத்தை வென்ற நெதர்லாந்து கடும் சவால் அளிக்க வியூகங்களை தீட்டுகிறது. பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் 17-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் (பி பிரிவு) மோதுகிறது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை சந்தித்தது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளி வழங்கப்பட்டது. எனவே இன்றைய ஆட்டம் இங்கிலாந்துக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் 23 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

 

The post இன்று இரவு 2 போட்டி; தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து இங்கி.-ஆஸ்திரேலியா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: