துறையூர் அருகே தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

 

துறையூர், ஜூன் 8: துறையூர் அருகே தெருநாய்கள் கடித்து மான் உயிரிழந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் ஊராட்சிக்குள்பட்ட மருக்கலாம்பட்டி கிராமத்திற்கு தண்ணீர் தேடி நேற்று இரண்டு வயது புள்ளி மான் வந்தது. இந்த நிலையில் மானைப் பார்த்ததும் அங்கிருந்த தெருநாய்கள் துரத்தி துரத்திக் கடித்து கொன்றது. உடனே பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மானின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வு செய்த பின்னர் அந்தப் பகுதியிலுள்ள வனத்தில் மானின் உடலை புதைத்தனர்.

The post துறையூர் அருகே தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் பலி appeared first on Dinakaran.

Related Stories: