லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

 

லால்குடி. ஜூன் 11: லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ முகாமில் துவக்கி வைத்தார். தமிழக அரசின் சிறப்புத் திட்டமான பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்ட முகாம் லால்குடி அரசுமேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. லால்குடி நகரமன்றத் தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் அறச் செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

முகாமில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா ஆரோக்கியசாமி, மேலாண்மைக்குழுத் துணைத் தலைவர் பகவான் கண்ணன், கல்வியாளர் சிங்க கிறிஸ்துராஜா, லால்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமார், ஆசிரியப் பயிற்றுநர்கள் ஹெலன் கவிதா, ரஞ்சித்குமார், தனலெட்சுமி, வீரமணி, சந்தான ராஜகுமாரி, சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்தல், திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

The post லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: