கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

 

திருச்சி,ஜூன்.12: திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகர் 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (34). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே.25 ம் தேதி சிந்தாமணி ஆண்டாள் வீதியில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. இந்த வெடி சிதறி விழுந்ததில் தாமரைக்கண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குபதிந்து நாட்டு வெடி வெடித்த திருச்சி பாலக்கரை ஜெயில் பேட்டையைச் சேர்ந்த பரணி (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: