இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

 

திருச்சி, ஜூன் 15: திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் செயற்குழு கூட்டம் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பாரதிதாசன், ராஜா, சிவசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மோகனாம்பாள், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவில் 28 மாநில கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணி என பெயரிட்டு தலைவர் ராகுல் தலைமையில் 18 வது மக்களவைத் தேர்தலில் 100 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக மாற்றுவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, தேர்தல் பரப்புரைக்கும், கட்சி தலைமைக்கும் ஒத்துழைப்பு அளித்த 28 மாநிலக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டை சிறப்பாக கையாண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தமிழ்நாட்டில் 40 நமதே நாடும் நமதே என்ற கொள்கை முழக்கத்தோடு தாயுள்ளத்தோடு கூட்டணி கட்சிகளை அரவணைத்து தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்து தேர்தல் அறிக்கை தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வெற்றி தேடி கொடுத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் கே. என். நேருவுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பீட்டர் சந்தியாகு,தொட்டியம் ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி, நகரத் தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: