பாலக்காடு ரயில்வே நிர்வாகம் சார்பில் ஜனதா கானா சிற்றுண்டி திட்டம் அறிமுகம்

 

பாலக்காடு, ஜூன் 8: பாலக்காடு மண்டல ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் நிலையங்களில் ஜனதா கானா என்ற சிற்றுண்டி நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலக்காடு மண்டல ரயில் நிலையங்களான மங்களூரூ சந்திப்பு, மங்களூரூ சென்டரல், தலச்சேரி, கோழிக்கோடு, திரூர், சொர்ணூர் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு ஆகிய முக்கிய ரயில் நிலைய நடைமேடைகளில் குறைந்த விலைக்கு உணவு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, ஜெனரல் கம்பார்ட்மென்ட் பகுதியில் இந்த விற்பனை மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இங்கு சாப்பாடு ரூ.20க்கு விற்கப்படுகிறது. இதில், 200 கிராம் லெமன் சாதம், தயிர் சாதம், தாள் கிச்சடி இவற்றுடன் ஊறுகாய் மற்றும் மரஸ்பூன் ஆகியவை வழங்கப்படுகிறது. ஜனதா கானா ரூ. 20க்கு விற்கப்படுகிறது. இதில், 325 கிராம் பூரி மசால், பிக்கிள்ஸ், லெமன் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், பொங்கல், மசாலா தோசை வழங்கப்படுகிறது என பாலக்காடு மண்டல ரயில்வே மேலாளர் அருண்குமார் சதுர்வேதி தெரிவித்தார். இந்த, சிற்றுண்டி நிலையங்களால் ஏராளமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

The post பாலக்காடு ரயில்வே நிர்வாகம் சார்பில் ஜனதா கானா சிற்றுண்டி திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: