கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

 

கந்தர்வகோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் ,பஞ்சகாவியம், இளநீர், பச்சரிசி மாவு, பன்னீர், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். கோயில் வளாகத்தில் பெண்கள் குழுவினராக சேர்ந்து கும்மியடித்து அம்மனை புகழும் பாடல்களை பாடிகொண்டாடி வருகின்றனர். பெண் பக்தர்கள் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

The post கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: