தூத்துக்குடி தொகுதியில் 2வது முறை வெற்றி கனிமொழிக்கு ராபர்ட் புரூஸ் வாழ்த்து

ஏரல்,ஜூன் 7: தூத்துக்குடி தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்பிக்கு நெல்லை தொகுதி காங். எம்பி ராபர்ட் புரூஸ் வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி எம்பி, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமாகா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் கனிமொழி எம்பியை நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ் எம்பி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல்வகாப், நெல்லை மாநகர் மாவட்ட காங். தலைவர் சங்கரபாண்டி மற்றும் நெல்லை ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி தொகுதியில் 2வது முறை வெற்றி கனிமொழிக்கு ராபர்ட் புரூஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: