இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடகாவை சேர்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக 4 பேர் சென்றனர். மோசமான வானிலை காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மலைப்பகுதியில் வழிதெரியாமல் பரிதவித்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் டேராடூன் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் பேசினேன். அப்போது அவர்கள் மலையேற்றம் சென்று விட்டு முகாமிற்கு திரும்பியபோது வானிலை மோசமடைந்தது. பலத்த காற்றும், பனிப்பொழிவும் ஏற்பட்டதில் சிக்கி கொண்டனர். என்பது தெரியவந்தது. உத்தரகாண்ட் அரசின் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய உள்துறையின் மீட்பு படையினர் அவர்களை மீட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இமயமலையில் மலையேற்றம் சென்ற 9 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.