ஜூன் 10 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாடுகளுக்கும் 5வது சுற்று கால் மற்றும் வாய் காணை நோய் (கோமாரி) தடுப்பூசி முகாம் ஜூன் 10 முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5வது சுற்று கால் நோய் மற்றும் வாய் காணை நோய் (கோமாரி) தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக ஜூன் 10ம் தேதி (திங்கள்கிழமை) முதல் முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை போடப்பட உள்ளது.

இப்பணிக்காக 70 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்திட வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தகவல்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஜூன் 10 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: