தேய்பிறை பிரதோஷ வழிபாடு

மேலூர், ஜூன் 6: மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் வைகாசி மாத, தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும், நந்தி எம்பெருமாளும் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்க நாதம் முழங்க, தீப கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணண் செய்திருந்தனர்.

The post தேய்பிறை பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: