ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

அமராவதி: ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளும் எதிர்த்து தனித்து போட்டியிட்டுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 131 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள குப்பம் தொகுதியில் 8வது முறையாக சந்திரபாபு நாயுடு தேர்வாகிறார்.

ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: