சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 3: ஈரோடு மாவட்ம் கொடிவேரி பகுதியில் கடத்தூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டதும் அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை நடத்தினர். இதில், அந்த வாலிபரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் தாராபுரத்தை சேர்ந்த சங்கர் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவத்தை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், சித்தோடு பஸ் ஸ்டாப் பகுதியில் புகையிலை பொருட்களை விற்றதாக அதேபகுதியை சேர்ந்த குப்புசாமி (49) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் (38), ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் (35), கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராஜா (40) பவானிசாகர் ஒத்தபனை மரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (22), பெருந்துறை சீனாபுரத்தில் அதேபகுதியை சேர்ந்த மணி (56), பெரியசாமி (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 78 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

The post சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: