தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து

புளோரிடா: இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவிநன் நாசா விண்வௌி ஆய்வு மையத்தில் இணைந்தார். 2006, 2012ல் இரண்டு முறை விண்வௌிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறையாக விண்வௌி செல்ல திட்டமிட்டிருந்தார். அவருடன் மேலும் 2 நாசா வீரர்கள் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

கடந்த மே 7ம் தேதி அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையத்தில் இருந்து புறப்பட தயாரான ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 90 நிமிடங்களுக்கு முன் அதன் பயணம் ரத்தானது.
இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஸ்டார்லைனரின் விண்வௌி பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி கவுன்டவுன் தொடங்கி 3 நிமிடம் 50 நொடிகளில் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்டார்லைனரை ஏவுவதில் 2ம் முறை தடை ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறை விண்வெளிக்கு செல்லும் திட்டம் ரத்தானது.

 

The post தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: