நியூ கினியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

புராவிடன்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான உலக கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், பப்புவா நியூ கினியா பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். கயானா, புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. பப்புவா நியூ கினியா தரப்பில் டோனி உரா, கேப்டன் ஆசாத் வலா இணைந்து இன்னிங்சை தொடங்கினர். உரா 2 ரன் எடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த லெகா சியாகா 1 ரன் மட்டுமே எடுத்து அகீல் உசைன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
நியூ கினியா 2.1 ஓவரில் 7 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், வலா – செசெ பாவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 27 ரன் சேர்த்தது. வலா 21 ரன், ஹிரி ஹிரி 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். நியூ கினியா 50 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. செசெ பாவ் – சார்லஸ் அமினி இணைந்து 5வது விக்கெடுக்கு 44 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அமினி 12 ரன், செசெ பாவ் 50 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), சாத் சோபர் 10 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பப்புவா நியூ கினியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. கிப்லின் டோரிகா 25 ரன் (17 பந்து, 3 பவுண்டரி), கபுவா மோரியா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆந்த்ரே ரஸ்ஸல், அல்ஜாரி ஜோசப் தலா 2, அகீல் உசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோத்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

 

The post நியூ கினியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: