தெலங்கானாவில் 10 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதி: முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை

ஐதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 10ல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கைப்பற்றும். 4 முதல் 5 தொகுதிகளில் பெறுவோம் என்று பாஜவினர் கூறுகின்றனர்.

பிஆர்எஸ் கட்சிக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும். மஜ்லிஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரசை பொறுத்தவரை குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது பெறுவோம். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தேசிய அளவில் பாஜ 240 தொகுதிக்கு மேல் கிடைக்காது. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும். ராகுல் காந்தி பிரதமராவார் என்றார்.

 

The post தெலங்கானாவில் 10 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதி: முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: