விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக அமித்சிங் பன்சல் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல செலவின பார்வையாளராக மனிஷ்குமார் மீனா ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை பார்வையாளராக அஜய்குமார் பாண்டே ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி 1324 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர். அந்த தொகுதியில் 9 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்த விளக்கத்தை தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: