உலக புகையிலை தின உறுதிமொழி ஏற்பு

கடத்தூர், ஜூன் 1:கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, மருத்துவர் கனல்வேந்தன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள் மற்றும் புகைப்பிடிக்கும் போது அருகில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் சௌமியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை செவிலியர், நம்பிக்கை மைய ஆலோசகர், சித்தா பணியாளர், கடத்தூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post உலக புகையிலை தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: