மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடுப்பு ரெய்டு அந்தியூரில் ஐவர் கால்பந்து போட்டி கணவர் சாவில் மர்மம்: மனைவி போலீசில் புகார்

 

ஈரோடு, ஜூன் 1: புகையிலை இல்லா தினத்தையொட்டி பிரம்மகுமாரிகள் சமாஜத்தினர் ஈரோட்டில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆண்டுதோறும் மே 31ம் தேதி புகையிலை இல்லாத தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஈரோடு பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் ராஜயோக தியான நிலையம் சார்பில், ஈரோடு பேருந்து நிலையத்தில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அபோது, புகை பழக்கத்தினால், 10 வினாடிக்கு ஒருவர் உயிரிழக்கிறார். உலகம் முழுவதும் 2,200 இறப்புகளும், ஆண்டுக்கு 30 லட்சம் இறப்புகளும் ஏற்படுகிறது.

மேலும், புகைப்பவர்களின் அருகில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். புகைப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி, பக்கவாதம், இதய ரத்த நாளச்சுருங்கள் ஏற்படுகின்றன. மேலும், பீடி, சிகரெட்டின் புகையில் விஷப் பொருட்கள் உள்ளன. அதில் 48 விஷப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கி மரணிக்க வைக்கின்றன. எனவே, புகைப்பதை நிறுத்தி, அன்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வோம் என விழிப்புணர்வு பிரசுரங்களை ராஜயோக தியான நிலைய சகோதரிகள் பொதுமக்களிடையே வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடுப்பு ரெய்டு அந்தியூரில் ஐவர் கால்பந்து போட்டி கணவர் சாவில் மர்மம்: மனைவி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: