மேட்டுப்பாளையம் மெமு ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி

 

மேட்டுப்பாளையம், மே 31: வடகோவை அம்பேத்கர் வீதி பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணி (48). இவரது மனைவி உமா மகேஸ்வரி (43). மணி பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு சாருலதா (24) என்ற மகளும், நவீன் பிரசாத் (18) என்ற மகனும் உள்ளனர். சாருலதா திருமணமாகி கணவருடன் தனியே வசித்து வருகிறார். நவீன் பிரசாத் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் சிஏ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு நண்பர்களை பார்ப்பதற்காக நவீன் பிரசாத் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி மெமு ரயில் சென்று கொண்டிருந்துள்ளது.

இதனை அறியாமல் நவீன்பிரசாத் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேட்டுப்பாளையம் மெமு ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: