அரசு போக்குவரத்து கழக கிளையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

 

திண்டுக்கல், மே 31: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மண்டல அலுவலகம், திண்டுக்கல் 1 கிளைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று திண்டுக்கல் 3 கிளையில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை மண்டல பொது மேலாளர் டேனியல் சாமுவேல் திறந்து வைத்தார்.

மேலும் திண்டுக்கல் 2 கிளையில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் நிறுவப்பட உள்ளது. இதனை திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி செயலாளர் ரத்தினம், நாகா மில்ஸ் சேர்மன் கமல கண்ணன் அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கினர். நிகழ்ச்சியில், திண்டுக்கல் கோட்ட மேலாளர் ரமேஷ், வணிக மேலாளர் சக்தி. தொழில் நுட்ப மேலாளர் சத்தியமூர்த்தி, கிளை மேலாளர் முகமது ராவுத்தர், தொ.மு.ச பொது செயலாளர் பொன்செந்தில் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து கழக கிளையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: