செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு

 

செம்பனார்கோவில், மே 30: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூரில் பழமைவாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாவிளக்கு ஏற்றி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: