மீஞ்சூர் பேரூராட்சியில் குளம் தூர்வாருதல், கழிவுநீர் அகற்றும் பணி: மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

திருவள்ளூர், மே 30: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு எண் 2 அரியன்வாயல், அம்மா செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டி.எச்.ரோடு, பாலகோட்டி மண்டபம் எதிரில் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கி வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தலின் பேரில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 2 அரியன்வாயல், அம்மா செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரும் பணிகளை உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் பார்வைக்கு ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதேபோல் டி.எச்.ரோடு, பாலகோட்டி மண்டபம் எதிரில் கழிவு நீர் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டு அடைப்புகளை நீங்கி நீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்ட அவர், கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடாதபடி சீர்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் மண்டல உதவி செயற்பொறியாளர் உ.சரவணன், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, சுதாகர பணி மேற்பார்வையாளர் கோபிநாத் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post மீஞ்சூர் பேரூராட்சியில் குளம் தூர்வாருதல், கழிவுநீர் அகற்றும் பணி: மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: